தனிகட்சி மூலம் அரசியல் உலகில் நுழைந்த குமரி டிக்சன்

Home / Portfolio / தனிகட்சி மூலம் அரசியல் உலகில் நுழைந்த குமரி டிக்சன்

தனிகட்சி மூலம் அரசியல் உலகில் நுழைந்த குமரி டிக்சன், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக் அறிமுகமாகிறார். மகிழ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கபளீஹரம்’ என்ற திரைப்படத்தில் குமரி டிக்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.

முருகவேல் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் குமரி டிக்சன் நடித்திருக்கும் இப்படத்தில் மைம் கோபி, யோகிராம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும், புதுமுக நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர்.

லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை கொடூரமாக கொலை செய்து லாரிகளை கடத்தும் வட இந்திய கும்பலை தமிழக காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.